உணவுக்குப் பிறகு அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்?

அன்னாசிப் பழங்களில் மாங்கனீஸ் நிறைந்து காணப்படுகிறது. இது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், எலும்பு சார்ந்த குறைபாடுகளை சரிசெய்யவும், உடலின் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

அன்னாசி பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி, சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், கேன்சரை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கஸ்ல்களின் உற்பத்தியைத் தடுக்க இது உதவ கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

அன்னாசிப்பழம் சுவையான பழம் மட்டுமல்லாமல், பல்வேறு ஊட்டச்சத்துகளையும் கொண்ட ஒரு பழமாகும். குறிப்பாக, உணவுக்குப் பிறகு அளவோடு அன்னாசிப்பழம் சாப்பிடுவது செரிமான செயல்பாட்டுக்கு உதவக்கூடும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு வயிற்றுக்குள் சென்ற பிறகு, உடலின் இயற்கையான செரிமான நொதிகள் செயல்படத் தொடங்குகின்றன. அந்த நேரத்தில் அன்னாசிப்பழத்தை அளவோடு சாப்பிடலாம். இதில் உள்ள புரோமேலைன், செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவும். மேலும், உணவுக்குப் பிறகு ஏற்படும் லேசான வயிற்று கனத்தன்மை அல்லது அசௌகரியத்தை சிலருக்கு குறைக்க உதவக்கூடும்.

புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை வழக்கமாக எடுத்துக்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உணவுக்குப் பிறகு அவ்வப்போது வயிறு கனமாக உணருபவர்கள் அளவோடு அன்னாசிப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தொடர்ந்து வயிற்று வலி, அதிக வாயு, செரிமானக் கோளாறு அல்லது வயிற்றுப்பெருக்கு போன்ற பிரச்சனைகள் இருந்தால், பழங்களை மட்டும் நம்பாமல் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது முக்கியம்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular