அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில், மெட்டா நிறுவனத்துக்கு ரூ.162 கோடி அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்காவில் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை சமூக வலைதளங்களுக்கு அடிமையாக்கும் வகையில் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் எழுந்தது. குழந்தைகள் நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் ஈடுபடுத்தும் வகையில் தளங்களின் அம்சங்கள் வடிவமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேரில் ஆஜராக வேண்டிய சூழலும் ஏற்பட்டது. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாகவே, ரூ.162 கோடி அபராதத்தை செலுத்த மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
