சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; எந்த மண்டலத்திற்கு யார்?

சென்னையில் 15 மண்டலங்களை ஒருங்கிணைக்க அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரமேஷ், லோகேஷ் தமிழ்செல்வன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, பிரபு, விஜய் தமிழன் பார்த்திபன், விக்னேஷ் ஆகியோரும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் மற்றும் மணலி மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தண்டையார்பேட்டை மற்றும் மாதவரம் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக லோகேஷ் தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராயபுரம் மற்றும் திருவிக நகர் மண்டல பொறுப்பு அமைச்சராக அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விஜய் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆலந்தூர் மற்றும் அடையார் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விஜய் தமிழன் பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு பொறுப்பு அமைச்சராக விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular