வெள்ளத்தில் மிதந்த சடலத்தில் இருந்து தங்க நகை திருட்டு; இருவர் கைது

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் உயிரிழப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

நேபாள பேரிடர் மேலாண்மை அமைப்புகள் வெளியிட்ட தகவலின்படி, இந்த வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 517 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 910 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், வெள்ள நீரில் மிதந்து வந்த ஒரு சடலத்தில் இருந்த தங்க நகையை இரண்டு பேர் திருடும் காட்சி அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி நகை திருடிய இரண்டு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மதன் குருங் (25) மற்றும் உமேஷ் சௌத்ரி (38) என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular