அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி’ திரைப்படம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இப்படம், வெளியான 15 நாட்களுக்குள் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வெளியான 15 நாட்களுக்குள் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பதிவு செய்ததாக படக்குழு அறிவித்தது. இதன் மூலம் இந்த ஆண்டின் கவனம் பெற்ற தமிழ் படங்களில் ஒன்றாக ‘டிசி’ அமைந்துள்ளது.
படத்தில் லோகேஷ் கனகராஜுடன் வாமிகா கபி, சஞ்சனா ஏ.கே., ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், ‘டிசி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 4 ம் தேதி சன் நெக்ஸ்ட் தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
