தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படத்திற்கு ‘கிங் 100’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்குநர் ரா. கார்த்திக் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘கிங் 100’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நாகார்ஜுனா 25 வயது முதல் 60 வயது வரையிலான பல்வேறு வயது தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நவீன டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். நாகார்ஜுனாவின் 100-வது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
