தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான எஸ்.ஐ.ஆர். (SIR) தொடர்பாக புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. வாக்காளர் பெயர் நீக்கம், புதிய வாக்காளர்களை சேர்ப்பதில் உள்ள நடைமுறைகள் மற்றும் தேர்தல் தரவுகளின் பாதுகாப்பு குறித்து விவாதம் ஏற்பட்டுள்ளது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் பல்வேறு முடிவுகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளனர். ஆனால், தங்களது ஆலோசனையை ஏற்காமல் தலைமைத் தேர்தல் ஆணையர் முடிவு எடுத்ததாக கூறியுள்ளனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. டெல்லி, பீகார், அசாம், பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாட்னாவில் காங்கிரஸ் தொண்டர்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். சுமார் அரை கிலோமீட்டர் நடைபெற்ற இந்தப் பேரணியில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அசாம் மாநிலம் கவுகாத்தியிலும் காங்கிரஸ் போராட்டம் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான ராஜீவ் பவனில் இருந்து தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகம் நோக்கி கட்சியினர் பேரணியாகச் சென்றனர்.

சண்டிகரில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் ராஜா வாரிங் தலைமையில் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றபோது காவல்துறை அவர்களைத் தடுத்து நிறுத்தியது.

இதையும் படிங்க : வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) அனைத்து வங்கிகளும் இயங்கும் : நிதி அமைச்சகம் அறிவிப்பு

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial