ஆப்பிளின் புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max மாடல்கள் விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே, அவற்றின் திரையில் பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிற செங்குத்து கோடுகள் தோன்றுவதாக சில பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது.
இந்தியாவில் ஆப்பிளின் புதிய iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஸ்மார்ட்போன்களின் விற்பனை கடந்த செப்டம்பர் 18ம் தேதி விற்பனை செய்யப்பட்டது. புதிய மாடல் ஐபோனை வாங்குவதற்காக டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள Apple Store-களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர்.
இந்நிலையில், iPhone 18 Pro பயன்படுத்துவதாகக் கூறும் சிலர் தங்கள் மொபைல் டிஸ்பிளேயில் பச்சை நிற கோடு தோன்றுவதாக வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளனர்.
செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியான ஒரு சமூக வலைதளப் பதிவில், iPhone 18 Pro திரையில் பச்சை நிற கோடு காணப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சில பயனர்கள் தங்கள் மொபைலை Reset செய்த பிறகும் அந்த கோடு மறையவில்லை என்று கூறியுள்ளனர். மற்றொரு சில பதிவுகளில் பச்சை நிறத்துடன் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற கோடுகளும் திரையில் தோன்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்ற புகார்கள் இந்தியா உள்ளிட்ட பல சந்தைகளிலிருந்தும் வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்து ஆப்பிள் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.
இதையும் படிங்க : சிம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை..ரூ.50 லட்சம் அபராதம், 3 ஆண்டுகள் சிறை

