சிம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை..ரூ.50 லட்சம் அபராதம், 3 ஆண்டுகள் சிறை

உங்கள் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, உங்களுக்குத் தெரியாமல் வேறு யாராவது சிம் கார்டு வாங்கியிருக்கிறார்களா என்பதை இனி எளிதாகச் சரிபார்க்கலாம். இதற்காக மத்திய தொலைத்தொடர்புத் துறை ‘சஞ்சார் சாதி’ என்ற சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் உங்களுக்குத் தொடர்பில்லாத எண்ணை அடையாளம் கண்டு புகாரளிக்கவும் இந்த சேவை உதவுகிறது.

தவறான முறையில் சிம் கார்டு வாங்குதல், தொலைத்தொடர்பு அடையாளங்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் IMEI எண்ணில் முறைகேடு செய்தல் போன்றவற்றுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ₹50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று மத்திய தொலை தொடர்பு துறை எச்சரித்துள்ளது.

ஏன் இந்த எச்சரிக்கை?

சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற சைபர் குற்ற விசாரணையின்போது, ஒரு நபர், பொதுமக்களின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி 25 சிம் கார்டுகள் வாங்கியதாக தெரிய வந்தது. இதையடுத்து அந்த 25 மொபைல் எண்களும் ஆய்வு செய்யப்பட்டன. இந்த சம்பவத்திற்கு பிறகுதான், தங்கள் பெயரில் எத்தனை மொபைல் இணைப்புகள் உள்ளன என்பதை பொதுமக்கள் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் பெயரில் உள்ள SIM-களை எப்படி பார்ப்பது?

இதற்காக ‘சஞ்சார் சாதி’ தளத்தில் உள்ள “Know Mobile Connections in Your Name” வசதியைப் பயன்படுத்தலாம். இந்த சேவை மூலம் உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்களைப் பார்க்க முடியும். உங்களுக்குத் தெரியாத அல்லது நீங்கள் பயன்படுத்தாத எண்ணைக் கண்டால், அதை மோசடியான இணைப்பாகப் புகார் அளிக்கலாம்.

உங்கள் SIM-ஐ மற்றவரிடம் கொடுக்காதீர்கள்

உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள SIM கார்டை மற்றொருவரிடம் பயன்படுத்துவதற்காக கொடுக்கக்கூடாது என மத்திய தொலை தொடர்பு துறை எச்சரித்துள்ளது. அந்த SIM பின்னர் சைபர் மோசடி அல்லது வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டால், அந்த இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கவனிக்கப்படும்.

இதையும் படிங்க : AI மீது அதிக நம்பிக்கை வைத்தால் என்ன ஆகும்? ஸ்ரீதர் வேம்பு முக்கிய எச்சரிக்கை

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial