அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விருப்பத் தேர்வு நடைமுறைப் பயிற்சி (OPT) திட்டத்தில் மிகப்பெரிய கட்டண மாற்றத்தை கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதன்படி, F-1 மாணவரின் முதல் OPT பரிந்துரைக்கு 70,000 அமெரிக்க டாலர் கட்டணமும், அடுத்தடுத்த OPT பரிந்துரைகளுக்கு 30,000 அமெரிக்க டாலர் கட்டணமும் விதிக்கப்படலாம். இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.67 லட்சம் மற்றும் ரூ.29 லட்சம் ஆகும்.
இந்தக் கட்டணம் மாணவர்களிடம் நேரடியாக வசூலிக்கப்படாது; OPT-க்கு மாணவரை பரிந்துரைக்கும் கல்வி நிறுவனமே முதலில் செலுத்த வேண்டும் என்று முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது.
OPT என்றால் என்ன?
அமெரிக்காவில் F-1 மாணவர் விசாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களது படிப்புடன் தொடர்புடைய துறையில் நடைமுறை பணி அனுபவம் பெறுவதற்கான வாய்ப்புதான் OPT.
உதாரணமாக, அமெரிக்காவில் கணினி அறிவியல் படிக்கும் ஒரு மாணவர், படிப்புடன் தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து அனுபவம் பெற OPT உதவுகிறது.
பொதுவாக தகுதியுள்ள மாணவர்களுக்கு 12 மாதங்கள் வரை OPT கிடைக்கலாம். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த தகுதியான படிப்புகளை முடித்தவர்களுக்கு கூடுதலாக 24 மாத STEM OPT நீட்டிப்பு கிடைக்கலாம். இதனால் சில மாணவர்களுக்கு மொத்தம் மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி மற்றும் வேலை அனுபவம் பெறும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க : நடுவானில் விமானத்தை தாக்கிய மின்னல்.. விமானத்தின் முன்பகுதி சேதம்.!

