BMW கார் எரிந்த வழக்கு: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நீதி

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு ரவிகாந்த் என்பவர் தனது BMW காரில் மாநில நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது காரின் டயர் பஞ்சரானது. இதையடுத்து, சாலையோரத்தில் இருந்த உணவகம் ஒன்றின் அருகே காரை நிறுத்திவிட்டு மற்றொரு வாகனத்தில் தனது வீட்டுக்குச் சென்றார்.

மறுநாள் காலையில் காரை எடுப்பதற்காக வந்தபோது, அவருடைய BMW கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கு இழப்பீடு கோரி, ரவிகாந்த் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகினார். ஆனால், பஞ்சரான காரைப் பாதுகாப்பற்ற நிலையில் விட்டுச் சென்றிருக்கக் கூடாது என்று கூறி, இழப்பீடு வழங்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து, காரின் உரிமையாளர் நுகர்வோர் ஆணையத்தை அணுகினார். இந்த வழக்கு நீண்டகாலமாகத் தொடர்ந்து வந்த நிலையில், சம்பவம் நடந்து சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்வு கிடைத்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிர நுகர்வோர் ஆணையம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.70.75 லட்சம் இழப்பீடு வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க : எல் நினோவின் தாக்கம் 2027 வரை நீடிக்கும் : உலக வானிலை மையம் தகவல்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial