மஹிந்திரா XUV 3XO முதன்முதலில் 2024 ஏப்ரல் 29 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மஹிந்திரா XUV300-ன் மேம்படுத்தப்பட்ட, புதிய மாடலாகும். இதன் வடிவமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள், செயல்திறன் மற்றும் விலை வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான XUV 3XO காம்பாக்ட் எஸ்யூவி மாடலில் புதிய சிஎன்ஜி வகையை அக்டோபர் 15, 2026 அன்று அறிமுகம் செய்ய உள்ளது. எரிபொருள் செலவை குறைக்க விரும்புவோருக்கு இந்த புதிய சிஎன்ஜி மாடல் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு XUV 3XO-விலும் இந்த வசதியை கொண்டுவருகிறது. சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்படும்போது, காரின் பின்புற பொருள் வைக்கும் இடம் குறையுமா என்பது வாடிக்கையாளர்களிடம் முக்கிய கேள்வியாக உள்ளது.
மஹிந்திரா XUV 3XO ஏற்கனவே இந்திய சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில், சிஎன்ஜி வகை அறிமுகமாகிறது. அக்டோபர் 15 அன்று நடைபெற உள்ள அறிமுக நிகழ்வில், மஹிந்திரா நிறுவனம், புதிய XUV 3XO சிஎன்ஜி தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : நடுவானில் விமானத்தை தாக்கிய மின்னல்.. விமானத்தின் முன்பகுதி சேதம்.!

