இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

இறால் பலருக்கும் பிடித்தமான கடல் உணவுகளில் ஒன்று. சுவையாக இருப்பதுடன், உடலுக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள் உள்ளது. 100 கிராம் சமைத்த இறாலில் தோராயமாக 70 கலோரிகள், 15.4 கிராம் புரதம், 0.9 கிராம் கொழுப்பு, இரும்புச்சத்து, துத்தநாகம், செலீனியம் மற்றும் அயோடின் ஆகியவை உள்ளன.

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இறாலில் உடலுக்குத் தேவையான புரதம் உள்ளது. உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் தங்களுடைய உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்க விரும்புபவர்கள் இறாலைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இறாலில் புரதம் அதிகமாகவும், கொழுப்பின் அளவு குறைவாகவும் இருப்பதால், சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். புரதம் சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த உணர்வைத் தர உதவுவதால், அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உதவும்.

இதையும் படிங்க : சப்ஜா விதைகளை தினமும் சாப்பிடலாமா? அதிகமா சாப்பிட்டால் என்ன நடக்கும்?

இறாலைச் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை

இறால் சாப்பிட்ட பிறகு அரிப்பு, தோலில் தடிப்புகள், உதடு வீக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சரியாகச் சமைக்கப்படாத அல்லது முறையாகச் சேமிக்கப்படாத இறாலில் கிருமிகள் வளர்ந்து உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். எனவே, புதிய இறாலைத் தேர்வு செய்து நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவது அவசியம்.

இறாலை வாங்கும்போது அது புதியதாகவும், முறையாகக் குளிரூட்டப்பட்ட நிலையிலும் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். அதிக எண்ணெய் மற்றும் உப்பு சேர்ப்பதைக் குறையுங்கள்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});