தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார்.
இந்தநிலையில், த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் இன்று (06.05.2026) தாக்கல் செய்தார்.
மண்ணின் வளத்தை பாதுகாக்க” தமிழ்நாடு மணவள பாதுகாப்பு இயக்கம் -ரூ.122.51 கோடி ஒதுக்கீடு.
நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்திற்கு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு.
ஒவ்வொரு உழவருக்கும் தனிப்பயன் சேவைகள் ஏஐ அடிப்படையிலான உழவர் செயலி தொடங்கப்படும். அதற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு.
உயிர்ம உரப்பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு. உழவர் ஐடி பெற்ற 3 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6 கோடியில் மண்வள அட்டை.
மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு.
தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.
மழை வெயிலிருந்து விளை பொருட்களை பாதுகாக்க 43,500 தார்பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
சாமை, தினை, வரகு, குதிரை வாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும். இத்திட்டதிற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு.
கருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு.
விதை சுத்திகரிப்பு திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு.
5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு.
சிறிய தளிர்..பெரிய ஆரோக்கியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு.
மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு.
மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும். அஞ்சலை அம்மாள் பெயரில் முதல் பரிசு ரூ.2.50 லட்சம். 2-வது பரிசு ரூ.1.50 லட்சம், 3-வது பரிசு. ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
பனை நடுவோம். பலன் பெறுவோம் என்பதன் அடிப்படையில் பனை பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
தரமான பருத்தி உற்பத்தியை பெருக்கிட ஏதுவாக பருத்து மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு.
தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு.
அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு.
நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு.
வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் “வெற்றி விவசாயி விருது” வழங்கப்படும் முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள் வழங்கப்படும்; இதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.
புளுபெரி அவகோடா, கிவி உள்ளிட்டட உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.இதற்காக ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீடு.
1,720 ஏக்கரில் 1.51 கோடியில் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம்.
100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு.
இ- வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.
ஆயிரம் ஏக்கர் பாசனம் பரம்பை உருவாக்கிட பொதுப்பிரிவைச் சார்ந்த 500 விவசாயிகளுக்கு ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் பின்னேற்பு மானியத்தில் அமைத்தல் அதிகபட்ச மானியம் 60% ரூ.6 கோடி ஒதுக்கீடு.
கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து, மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ரூ.49.4 லட்சம் நிதி ஒதுக்கீடு.
2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் ரூ.4.80 கோடி ஒதுக்கீடு.
திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி மதிப்பில் புதிய வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
உழவர் சந்தைகள் புனரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு விவசாயிகளுக்கு நேரடி விற்பனை மற்றும் நிறைவான வருமானத்தை உறுதி செய்ய ஏற்பாடு.
கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் ‘நம்மாழ்வார்’ பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப் பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு.
நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
நீலகிரி விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
சிறு பால்பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு.
கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடிக்கு ரூ.49.4 லட்சம் ஒதுக்கீடு.
காளான் வளர்ப்பினை ஊக்குவிக்க கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு 50 சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதியில் அமைக்கப்படும்.
