HomeTamilnaduரீல்ஸ், போட்டோ, வீடியோ எடுக்க முடியாது.. தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்

ரீல்ஸ், போட்டோ, வீடியோ எடுக்க முடியாது.. தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்

கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கும் பழக்கம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் முக்கிய கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் முக்கிய கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது. செல்போனை பாதுகாப்பாக வைப்பதற்காக பக்தர்களிடம் ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்களுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதற்கான தடை மட்டுமின்றி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோயில் சிலைகள், கருவறை மற்றும் கோயிலின் புனிதமான பகுதிகளை புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயில் வளாகத்தில் சமூக வலைதளங்களுக்கான ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை பதிவு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி கோயிலுக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என அறநிலையத் துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஐபிக்கள், குறிப்பாக நடிகர், நடிகைகள் கோயில்களுக்கு வரும்போது அவர்களுடன் செல்லும் ஊடகக் குழுக்கள் கோயிலுக்குள் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments