HomeTamilnaduசென்னையில் ஏ.ஆர்.ரகுமான் மகன் பயணித்த கார் விபத்து

சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் மகன் பயணித்த கார் விபத்து

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன், சென்னையில் நடந்த கார் விபத்து ஒன்றில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் தப்பியுள்ளார். இன்று அதிகாலை வேளையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை வேளையில், ஏ.ஆர்.அமீன் தனது நண்பரான பார்கவ் என்பவருடன் கோயம்பேடு பகுதியிலிருந்து சொகுசு கார் ஒன்றில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்துள்ளார். சென்னை கிண்டி பகுதியில் உள்ள புகழ்பெற்ற கத்திப்பாரா மேம்பாலம் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒரு கால் டாக்சி மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த ஏ.ஆர்.அமீன், அவரது நண்பர் பார்கவ் மற்றும் கால் டாக்சியை ஓட்டி வந்த ஓட்டுநர் ஆகிய மூவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments