திமுக பரப்பிய அவதூறுகளை இடைத்தேர்தல் முறியடித்துள்ளது : அமைச்சர் ஷாஜகான் பேட்டி

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் த.வெ.க. முன்னிலையில் இருந்து வருகிறது. இதனை அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தவெகவின் முன்னிலை குறித்து அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் விஜய் வழங்கிய நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு தான் இடைத்தேர்தல் முடிவு. தவெக ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். மதுராந்தகம் தொகுதியில் கடந்த முறை 2வது இடத்தை பிடித்த தவெக இப்போது முதலிடத்தை பிடித்துள்ளது.

அடிப்படை ஆதாரமின்றி குதிரை பேரம் என அவதூறு பரப்பினார்கள். அந்த அவதூறு முறியடிக்கப்பட்டுள்ளது. தோல்வியில் இருந்து திமுக வெளியில் வர முயற்சிக்க வேண்டுமே தவிர அவதூறுகளை பரப்பக்கூடாது.

அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் வெற்றியை நோக்கி முன்னேறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : குற்றவாளியின் மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்ப அமெரிக்கா முடிவு

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial