ஒவ்வொரு எண்ணெய்க்கும் தனித்துவமான மணம், சுவை மற்றும் சமையல் பயன்பாடு உள்ளது. எனவே அனைத்து வகையான உணவுகளுக்கும் ஒரே எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக, தயாரிக்கும் உணவுக்கும் சமையல் முறைக்கும் பொருத்தமான எண்ணெயை தேர்வு செய்வது நல்லது. பாரம்பரிய தென்னிந்திய உணவுகளில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சுவையையும் மணத்தையும் அதிகரிக்க உதவுகின்றன
நல்லெண்ணெய்
நல்லெண்ணெய் தமிழர்களின் பாரம்பரிய சமையலில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக காரக் குழம்பு, வத்தல் குழம்பு, தொக்கு, இட்லிப் பொடி, தாளிப்பு மற்றும் மிதமான தீயில் வதக்கப்படும் உணவுகளுக்கு இது பொருத்தமானதாக குறிப்பிடப்படுகிறது.
நல்லெண்ணெயின் தனித்துவமான மணம் குழம்பு போன்ற உணவுகளுக்கு கூடுதல் சுவையை அளிக்கிறது. எள்ளில் காணப்படும் ‘செசமோல்’ என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பான எல்.டி.எல். அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவும் என கூறப்படுகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் பல்வேறு சமையல் பயன்பாடுகளைக் கொண்ட மற்றொரு எண்ணெயாகும். குறிப்பாக பொரியல், அவியல், துவையல் தாளிப்பு, மீன் வறுவல் மற்றும் குறைந்த முதல் மிதமான வெப்பத்தில் செய்யப்படும் சமையலுக்கு இது ஏற்றதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : உணவுக்குப் பிறகு அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்?
கேரள பாணி காய்கறி அவியலில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவது அதன் மணத்தையும் உணவின் இயற்கை சுவையையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் நோய் எதிர்ப்பு செயல்பாட்டுக்கு உதவுகிறது.
சூரியகாந்தி எண்ணெய்
சூரியகாந்தி எண்ணெய் அன்றாட சமையலில் பலரும் பயன்படுத்தும் எண்ணெய்களில் ஒன்றாகும். குறிப்பாக பலகாரங்களைப் பொரித்தல், அதிக வெப்பத்தில் வறுத்தல் மற்றும் வழக்கமான வதக்கல் போன்ற சமையல் முறைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மை இருப்பதால், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை மொறுமொறுப்பாகப் பொரிப்பதற்கும் இது பயன்படுத்தப்படலாம்.
எந்த சமையலுக்கு எந்த எண்ணெய்?
நல்லெண்ணெய்
காரக் குழம்பு, வத்தல் குழம்பு, தொக்கு, தாளிப்பு மற்றும் மிதமான வதக்கல் போன்றவற்றுக்கு ஏற்றது.
தேங்காய் எண்ணெய்
அவியல், பொரியல், துவையல் தாளிப்பு, மீன் வறுவல் மற்றும் மிதமான வெப்ப சமையலுக்கு ஏற்றது.
சூரியகாந்தி எண்ணெய்
அதிக வெப்பத்தில் பொரித்தல், பலகாரம் தயாரித்தல் மற்றும் வறுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க : டீ குடிப்பதை ஒரு மாதம் நிறுத்திப் பாருங்கள்.. உடலில் இந்த மாற்றங்கள் ஏற்படலாம்!

