தமிழகத்தில் சர்க்கரை விலை கிடுகிடு உயர்வு: டீ, காபி விலையும் அதிகரிக்குமா?

தமிழகத்தில் சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சில இடங்களில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.67 வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தேநீர், காபி மற்றும் இனிப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு சர்க்கரை வழங்கும் முக்கிய மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பது விலை உயர்வுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் சில சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை பதுக்கி வைத்திருப்பதாகவும், இதுவும் சந்தையில் விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில்லறை சந்தைகளில் ஒரு கிலோ சர்க்கரையின் விலை சுமார் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சர்க்கரை விலை கிலோ ரூ.67 என்ற அளவை எட்டியுள்ளது. சர்க்கரை விலை உயர்வு காரணமாக தேநீர், காபி விலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular