ரூ.40-க்கும் குறைவான விலையில் 20 ஜிபி டேட்டா: பி.எஸ்.என்.எல். அதிரடி ஆஃபர்

அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., பல்வேறு வவுச்சர்களை வழங்கி வருகிறது. இதில் 3 அதில் வவுச்சர் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.39 வவுச்சர்

இந்த வவுச்சரை ரீசார்ஜ் செய்தால் 20 ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் செல்லுபடியாகும் காலம் 1 நாள் மட்டுமே. 20 ஜிபி டேட்டாவை முழுமையாக பயன்படுத்திய பிறகு இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். இது தனியாக பயன்படுத்தக்கூடிய திட்டம் அல்ல. ஏற்கனவே செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டம் இருக்கும் பி.எஸ்.என்.எல். எண்ணில் மட்டுமே இந்த டேட்டா வவுச்சரை பயன்படுத்த முடியும்.

ரூ.19 வவுச்சர்

குறைந்த அளவு கூடுதல் டேட்டா தேவைப்படுபவர்களுக்கு ரூ.19 வவுச்சரும் உள்ளது. இதில் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கும் 1 நாள் செல்லுபடியாகும் காலம் உள்ளது.

ரூ.58 வவுச்சர்

நீண்ட காலத்திற்கு கூடுதல் டேட்டா தேவைப்படுபவர்களுக்காக ரூ.58 வவுச்சரும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 8 ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். டேட்டா அளவு முடிந்த பிறகு, இணைய வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறையும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular