இனி வாகனங்களில் ‘ஹை-பீம்’ கிடையாது? – ஹெட்லைட் விதிகளில் புது மாற்றம்.!

இரவு நேரங்களில் நிகழும் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில், வாகனங்களின் ஹெட்லைட் பயன்பாட்டில் கடுமையான விதிமுறைகளைக் கொண்டு வர மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வாகனங்களின் ஹெட்லைட்களில் இருந்து வெளிப்படும் வெளிச்சத்தின் அளவைக் குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிகளின்படி, இனி சந்தைக்கு வரும் புதிய இருசக்கர வாகனங்களில் உள்ள தானியங்கி முகப்பு விளக்குகள் இயங்கும்போது, அவை ‘லோ-பீம்’ முறையிலேயே செயல்பட வேண்டும்.

ஓட்டுநர்கள் பலரும் நகர்ப்புறங்களிலும் தேவையற்ற முறையில் ‘ஹை-பீம்’ பயன்படுத்துவதால் எதிரே வருபவர்களின் பார்வை தற்காலிகமாகப் பாதிக்கப்படுகிறது. இதைத் தடுக்கவே இந்த புதிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த புதிய விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular