டாடா கார் வாங்கப் போறீங்களா? செப்டம்பர் 1 முதல் ரூ.25,000 வரை விலை உயர்வு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களின் விலையை 2026 செப்டம்பர் 1 முதல் ரூ.25,000 வரை உயர்த்த உள்ளது. இந்தியாவில் கார் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தொடர்ந்து நிலவும் பணவீக்க அழுத்தம் காரணமாக இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

எந்தெந்த டாடா கார்களுக்கு விலை உயரும்?

Tiago, Altroz, Tigor, Punch, Nexon, Curvv உள்ளிட்ட பெட்ரோல் வாகனங்கள் இந்த விலை உயர்வை சந்திக்க உள்ளன. இதேபோல் டாடாவின் மின்சார வாகனங்களுக்கும் புதிய விலை அமலுக்கு வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் 2 முறை விலையை உயர்த்திய நிலையில் 3 வது முறையாக விலையை உயர்த்தியுள்ளது.

கார் வாங்க திட்டமா? இதை கவனியுங்கள்

செப்டம்பர் 1 முதல் புதிய விலை நடைமுறைக்கு வருவதால், டாடா கார் வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் விலை உயர்வுக்கு முன்பு முன்பதிவு செய்வது செய்யலாம். ஆகஸ்ட் 31-க்குள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பழைய விலை பொருந்தும் என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மற்ற நிறுவன கார் விலையும் உயர்கிறது

டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி, பிற முன்னணி கார் நிறுவனங்களும் உற்பத்திச் செலவு மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணமாகக் கொண்டு விலையை மாற்றி வருகின்றன. மாருதி சுசூகி நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் தனது கார்களின் விலையை ரூ.2,500 முதல் ரூ.30,000 வரை உயர்த்தியுள்ளது. அதேபோல் ஹூண்டாய் மோட்டார் இந்தியா செப்டம்பர் மாதம் முதல் தனது வாகனங்களின் விலையை 1 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular