‘அப்பா இங்கதான் பைக்கை மறைச்சு வச்சுருக்காரு’ – போலீசிடம் காட்டிக்கொடுத்த 6 வயது மகன்

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், அனந்தசாகரம் பகுதியில் போலீசார் வீடு வீடாகச் சென்று வாகனங்களின் ஆவணங்களை சரிபார்க்கும் சோதனை நடத்தினர்.

அப்போது சுரேஷ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை போலீசார் பார்க்காத வகையில் அருகிலுள்ள மற்றொரு தெருவுக்கு மறைத்து வைத்துள்ளார். வாகனத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர் பைக்கை மறைத்ததாக கூறப்படுகிறது.

தனது தந்தை வேறு தெருவில் பைக்கை நிறுத்தி வைத்துள்ளதாக அவரது 6 வயது மகன் மகேந்திரா போலீசிடம் தெரிவித்துள்ளான். பைக்கை மறைத்து வைத்திருக்கும் இடத்தைக் காட்டுவதாக கூறி அவர்களை அந்தப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

போலீசார் தங்களது பகுதியில் இருப்பதை பார்த்ததால் தந்தை பைக்கை அங்கு மறைத்து வைத்திருப்பதாக சிறுவன் தெரிவித்ததாக செய்தி கூறுகிறது. இதனால் போலீசாரும் அந்த இடத்துக்குச் சென்று வாகனத்தை கண்டுபிடித்தனர்.

சிறுவன் காட்டிய இடத்தில் இருந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பைக் மற்றும் அதற்கான ஆவணங்களை ஆய்வு செய்தபோது அவை சரியாக இருந்துள்ளது. இதையடுத்து சிறுவனின் நேர்மையான செயலை போலீசார் பாராட்டினர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular