“எங்களுக்கு பைக் வேணும்” – ஊராட்சி மன்றத் தலைவர்கள் மனு

வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.க்களுக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கடந்த 12-ஆம் தேதி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வாகன வசதி செய்து தரப்படும் என்று ஆகஸ்ட் 19 ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

வாகனத்திற்கு ஓட்டுநர் நியமித்து, வாகன எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்பிற்காக மாதந்தோறும் ரூ. 75 ஆயிரம் வழங்கப்படும். மேலும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கென்று ஒரு உதவியாளரை நியமித்து கொள்ளலாம். உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ. 25 ஆயிரம் அரசு சார்பில் வழங்கப்படும்” என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

“பைக் வேணும்’ – ஊராட்சி மன்றத் தலைவர்கள் மனு

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் இருசக்கர வாகனம் (பைக்) வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர் சார்பில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஊராட்சிகளில் பணிகளை திறம்பட மேற்கொள்ளவும், கிராமப் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்யவும் இருசக்கர வாகனம் மிகவும் அவசியமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular