பிரபல முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் நச்சுத்தன்மை நிறைந்த ‘ஊமத்தங்காய்’ மற்றும் அதன் விதைகள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகியவற்றின் உணவு உரிமங்களை கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடுமையான நச்சுத்தன்மை கொண்ட இத்தகைய அபாயகரமான பொருளை உணவுப் பட்டியலில் சேர்த்து விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விதிமீறல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
