ஆட்டோவை ரயிலில் ஏற்றிய ஓட்டுநர்., வைரலாகும் வீடியோ., உண்மை என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில், ஆட்டோ ரிக்ஷா ஒன்றை ரயிலில் ஏற்றிச் செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது குறித்து மத்திய ரயில்வே தற்போது விளக்கம் அளித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் மராத்தி மொழியை அறிந்திருக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 20 முதல் தொடங்கியுள்ளது.. மராத்தி மொழி சோதனை காரணமாக ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவுடன் மும்பையை விட்டு வெளியேறுவதாக பலரும் கருதினர்.

மத்திய ரயில்வே அளித்த விளக்கம்

ரயில்வே அதிகாரிகளின் வெளியிட்டுள்ள தகவல்படி, காணொலியில் இடம்பெற்றிருப்பது தற்போது இயக்கப்படும் ரயில் அல்ல. அது லோக்மான்ய திலக் டெர்மினஸ் – பனாரஸ் கோடைக்கால சிறப்பு ரயில்.

இந்த சிறப்பு ரயில் 2026 ஏப்ரல் 1 முதல் ஜூன் 15 வரை மட்டுமே இயக்கப்பட்டது. எனவே, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்று வரும் மராத்தி மொழி சோதனை காரணமாக ஓட்டுநர் மும்பையை விட்டு வெளியேறியதாகக் கூறப்படும் தகவலுக்கும் இந்தக் காணொலிக்கும் தொடர்பு இல்லை என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும், அந்த ஆட்டோ ரிக்ஷா ஏப்ரல் 27, 2026 அன்று லோக்மான்ய திலக் டெர்மினஸில் இருந்து பனாரஸுக்கு செல்லும் வகையில், ரயில்வே விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு சரக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular