ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்துவோம்: தமிழக விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு போதுமானதாக இல்லை என தமிழக விவசாயிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கொள்முதல் விலையை மேலும் உயர்த்தாவிட்டால் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்துவோம் என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து அறிவித்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளாக கொள்முதல் விலை உயர்த்தப்படாத நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உயர்வு பால் உற்பத்தியாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கால்நடை தீவனங்களின் விலை மற்றும் கூலி உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொள்முதல் விலை வெறும் ரூ.1 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கறவை மாடுகளின் நிலை மற்றும் பாலின் தரத்தை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.50, எருமைப்பாலுக்கு ரூ.60 கொள்முதல் விலையாக வழங்க வேண்டும் என்பது தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது.

இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சங்கத்தின் மாநிலத் தலைவர் சின்னசாமி அறிவித்துள்ளார். இதனிடையே, பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ஆகஸ்ட் 24 முதல் பால் நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என பால் உற்பத்தியாளர் அமைப்புகளும் ஏற்கனவே எச்சரித்துள்ளன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular