பெங்களூருவில் வீடு தேடிச் சென்ற பெண்ணுக்கு எதிர்பாராத விதமாக வேலைவாய்ப்பு கிடைத்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூருவில் பெண் ஒருவர், வீடு பார்ப்பதற்காக ஒரு குடியிருப்புக்குச் சென்றுள்ளார். முதலில் பார்க்க வேண்டியிருந்த வீட்டில் யாரும் இல்லாததால், அதே கட்டிடத்தில் இருந்த மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்த வீட்டில் சட்டத் துறைக்கான செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை உருவாக்கி வரும் நிறுவனர்கள் இருந்துள்ளனர். நிறுவனர்கள் உருவாக்கி வரும் தொழில்நுட்பம் குறித்து அங்கு சிறிய உரையாடல் நடைபெற்றுள்ளது.
அப்போது அவர் கேட்ட கேள்விகளையும் காட்டிய ஆர்வத்தையும் கவனித்த நிறுவனர்கள் அந்த பெண்ணை நிறுவனத்தில் பணியமர்த்த முடிவு செய்தனர். இந்த தகவலை அந்தப் பெண் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
வீடு பார்ப்பதற்காக மட்டுமே சென்ற ஒருவர், அங்கு நடந்த சாதாரண உரையாடலின் மூலம் ஒரு நிறுவனத்தின் நிறுவனர்களை சந்தித்து, பின்னர் வேலைவாய்ப்புக்கான வாய்ப்பையும் பெற்றிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
