நெய் நல்லதுதான்.. ஆனால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது!

நெய் இந்திய உணவு முறையில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெய் உடலுக்கு நல்லதுதான். ஆனால் சில உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் நெய்யை அதிகமாக உட்கொள்வது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

நெய்யில் கொழுப்பு அதிகம் இருப்பதால், அதை அளவுடன் எடுத்துக்கொள்வது முக்கியம். ஆரோக்கியமான நபர்கள் கூட தினசரி உணவில் நெய்யை அதிகமாக சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. நெய்யில் கொழுப்பு அதிகமாக உள்ளது. எனவே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்கள் நெய்யை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

குறிப்பாக இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் தங்களது உணவில் நெய்யின் அளவை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடுவது நல்லது. கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களும் அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

செரிமானக் கோளாறு, வயிற்றுப் பிரச்சினை, வாயுத் தொல்லை அல்லது வாந்தி உணர்வு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் நெய்யை தவிர்ப்பது நல்லது. நெய் அனைவருக்கும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதால், நெய் சாப்பிட்ட பிறகு உடலில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் தொடர்ந்து உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

நெய் அனைவரும் கட்டாயமாக தவிர்க்க வேண்டிய உணவு கிடையாது. ஆரோக்கியமான நபர்கள் தங்களது ஒட்டுமொத்த உணவு முறையை கருத்தில் கொண்டு குறைந்த அளவில் பயன்படுத்தலாம். ஆனால் அதிக கொலஸ்ட்ரால், இதய நோய், கல்லீரல் பிரச்சினை அல்லது செரிமானக் கோளாறு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular