நேபாள வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் டெல்லி வந்தனர்

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரழிவில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக டெல்லி வந்தடைந்தனர். அவர்களை தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் குழு டெல்லி விமான நிலையத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். அவர்களை பாதுகாப்பாக மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 21 தமிழர்கள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட தமிழர்களை காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டனர். அழைத்து வரப்பட்ட தமிழர்களை, புதுடெல்லி விமான நிலையத்தில் அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நேரில் வரவேற்றனர்.

மீட்கப்பட்ட தமிழர்களின் உடல்நலம் மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர்களை தமிழ்நாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular