நிதி முறைகேடு புகார் எதிரொலி: கர்நாடக அமைச்சர் பி. நாகேந்திரா ராஜினாமா

கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியலின பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்தில் நிதி முறைகேடு நடந்ததாக எழுந்த நிலையில், கர்நாடக அமைச்சர் பி. நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், எம்.எல்.ஏ பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

வால்மீகி கழக நிதி முறைகேடு விவகாரம் தொடர்பாக பி. நாகேந்திராவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சியான பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து கர்நாடக அரசுக்கு எதிராக பாஜக போராட்டங்களையும் தீவிரப்படுத்தியது.

இந்த சூழலில், அவர் தனது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பி. நாகேந்திராவின் ராஜினாமா கர்நாடக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது ராஜினாமா குறித்து பேசிய பி. நாகேந்திரா, கட்சிக்கு எந்தவித சங்கடமும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே தானாக முன்வந்து பதவிகளை விட்டு விலக முடிவு செய்ததாக தெரிவித்தார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular