ஜெராக்ஸ் கடையில் சிக்கிய 3,400 எஸ்.ஐ.ஆர் படிவங்கள்: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் ஆயிரக்கணக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் கார்கர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஜெராக்ஸ் கடையில், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான எஸ்.ஐ.ஆர். படிவங்கள் அதிக அளவில் நகலெடுக்கப்படுவதாக உத்தவ் சிவசேனா கட்சித் தொண்டர்களுக்கு தகவல் கிடைத்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ராய்காட் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் அந்த ஜெராக்ஸ் கடையில் சோதனை நடத்தினர். அப்போது,11 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த மொத்தம் 3,400 வாக்காளர் படிவங்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

இந்த படிவங்கள் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக பயன்படுத்தப்படும் அரசு ஆவணங்கள் என்பதால், அவை தனியார் ஜெராக்ஸ் கடைக்கு எப்படி வந்தன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், இந்த சம்பவத்தில் 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க : நேபாள வெள்ளத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பலி : 2,500 பேர் மாயம்..!

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular