HomeSpecial Airtcleகைகள் இல்லாமல் பிறந்து 40 ஆண்டுகளாக காலால் கார் ஓட்டும் 62 வயது நபர்

கைகள் இல்லாமல் பிறந்து 40 ஆண்டுகளாக காலால் கார் ஓட்டும் 62 வயது நபர்

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஜான் கீரிட்ஸ் (62), என்ற நபர் பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். இருப்பினும், கடந்த 40 ஆண்டுகளாக சிறப்பு வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்ட காரை இடது காலின் உதவியுடன் இயக்கி வருகிறார். இதனால், இதுவரை எந்த விபத்தும் நடந்தது இல்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

அவரது வாழ்க்கைப் பயணம், மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில்நுட்ப வசதிகள் எவ்வாறு சுதந்திரமான வாழ்க்கையை உருவாக்க உதவுகின்றன என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

சிறப்பு கருவியுடன் கார் ஓட்டும் முறை

ஜான் பயன்படுத்தும் வாகனம் வெளிப்படையாக சாதாரண காரைப் போலவே தோன்றினாலும், அதன் கட்டுப்பாட்டு அமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்டீயரிங்கிற்கு பதிலாக, பிரேக் மற்றும் ஆக்சிலரேட்டர் பெடல்களின் அருகில் ஒரு வட்ட வடிவ கட்டுப்பாட்டு தட்டு பொருத்தப்பட்டுள்ளது. அதில் அவரது இடது கால் நிலையாக பொருத்தப்படும் சிறப்பு காலணி இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கை விரல்கள் ஏன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது? வியப்பூட்டும் பின்னணி

காலை கீழே இழுத்தால் கார் இடது பக்கம் திரும்பும். காலை மேலே தள்ளினால் வலது பக்கம் திரும்பும்.
மற்றொரு காலால் ஆக்சிலரேட்டர் மற்றும் பிரேக் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், கியர் மாற்றுதல், ஹார்ன், விளக்குகள், வைப்பர் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்காக பொத்தான்களும் பொருத்தப்பட்டுள்ளன.

40 ஆண்டுகளாக விபத்தில்லா பயணம்

ஜான் ஆண்டுக்கு சுமார் 12,000 கிலோமீட்டர் வரை கார் ஓட்டுகிறார். பெரும்பாலும் குறுகிய தூரப் பயணங்களையே மேற்கொள்கிறார்.

நீண்ட தூரம் பயணிக்கும் போது, இடது கால் ஒரே நிலையில் இருப்பதால் சில நேரங்களில் வலி அல்லது மரத்துப்போன உணர்வு ஏற்படுவதாக அவர் கூறுகிறார். அப்போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடங்குகிறார்.

இது குறித்து அவர் கூறியபோது : “இது எனக்கு சுதந்திரத்தை கொடுத்துள்ளது. கார் ஓட்டுவது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் விரும்பும் இடத்திற்கு யாருடைய உதவியும் இல்லாமல் செல்ல முடிகிறது. கார் ஓட்டுவது எனக்கு மிகப்பெரிய சுதந்திரத்தை அளித்துள்ளது,” என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உங்களை மட்டும் கொசுக்கள் அதிகம் கடிக்கிறதா? ஆய்வுகள் சொல்லும் அறிவியல் காரணங்கள்!

மாற்றுத் திறனாளிகளுக்கான தன்னம்பிக்கை

பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லாமல் பிறந்தாலும், தொழில்நுட்ப உதவியும் தன்னம்பிக்கையும் இருந்தால் சுயமாக வாழ முடியும் என்பதற்கு ஜான் கீரிட்ஸ் ஒரு எடுத்துக்காட்டாக வாழ்கிறார். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஒருவரது வாழ்க்கைத் தரத்தை என்பதற்கு எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments