பயணிகளின் கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு, திருநெல்வேலி மற்றும் தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயிலை இயக்க தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்யும் பயணிகளுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து புறப்படும் தேதி மற்றும் நேரம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வண்டி எண் 06070 கொண்ட வாராந்திர சிறப்பு ரெயில் ஆகஸ்ட் 13, 20 மற்றும் 27 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும். இந்த ரெயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடையும்.
தாம்பரத்தில் இருந்து புறப்படும் தேதி மற்றும் நேரம்
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06069 கொண்ட சிறப்பு ரெயில் ஆகஸ்ட் 14, 21 மற்றும் 28 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1.55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 1.00 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நிலையங்களில் நின்று செல்லும்?
கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு.
முன்பதிவு எப்போது?
இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 6, 2026 காலை 8.00 மணி முதல் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் மற்றும் வார இறுதி நாட்களில் பயணிகள் அதிகம் இருப்பதால், முன்கூட்டியே டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளுமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
