Lava Virat V1 Pro 5G: ஆகஸ்ட் 24-ல் அறிமுகம்..வெளியான முக்கிய விவரங்கள்

Lava Virat V1 Pro 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 24-ம் தேதி அறிமுகமாக உள்ளது. இதன் விலை மற்றும் முழுமையான விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடாத நிலையில், சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாவா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவின் மூலம் Virat V1 Pro 5G ஆகஸ்ட் 24-ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் அறிமுகமான பிறகு, இந்த போன் Flipkart தளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAM பிரிவில் 6GB மற்றும் 8GB என இரண்டு தேர்வுகள் இருக்கலாம். சேமிப்பகமாக 128GB வழங்கப்படலாம் என்றும், மைக்ரோSD கார்டு மூலம் இதனை 1TB வரை விரிவாக்கும் வசதி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

புகைப்படங்களைப் பொறுத்தவரை, Virat V1 Pro 5G-ல் 50 மெகாபிக்சல் AI இரட்டை பின்புற கேமரா அமைப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த போனின் பேட்டரி திறன் குறித்த தகவல் தற்போது வெளியாகவில்லை. எனினும், 18W வரை வேகமான சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மென்பொருளைப் பொறுத்தவரை, Android 16 இயங்குதளம் இடம்பெறலாம். 5G இணைப்புடன் Wi-Fi 5, Bluetooth 5.0 மற்றும் USB Type-C போர்ட் ஆகிய வசதிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Virat V1 Pro 5G சுமார் 196 கிராம் எடை கொண்டிருக்கலாம். இதன் தடிமன் 8.2mm ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

லாவா கடந்த மாதம் இந்தியாவில் Virat V1 4G மற்றும் Virat V1 5G ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. அவற்றில் Virat V1 5G மாடலில் Unisoc T8200 சிப்செட், 6,000mAh பேட்டரி மற்றும் 90Hz டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், புதிய Virat V1 Pro 5G மாடல், தற்போதைய Virat V1 5G-க்கு மேலான பிரிவில் நிலைநிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular