கோயம்பேட்டில் வெங்காயம் விலை திடீர் உயர்வு : ஒரு கிலோ எவ்வளவு?

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் காய்கறி தேவையை பூர்த்தி செய்வதில் கோயம்பேடு சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து அதிக அளவில் காய்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன.

தற்போது மகாராஷ்டிரத்தில் கனமழை பெய்துள்ளதாலும், வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ளதாலும் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் வெங்காயத்தின் அளவு குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினமும் சுமார் 70 முதல் 80 லாரிகளில் வெங்காயம் வந்து கொண்டிருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 50 லாரிகளாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த 7-ஆம் தேதி ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையாகிய நிலையில், தற்போது கிலோ ரூ.50 வரை உயர்ந்துள்ளது. மேலும், தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்துள்ளது.

இன்றைய காய்கறிகள் விலை நிலவரம்

நாட்டு தக்காளி: கிலோ ரூ.18 முதல் ரூ.25

நவீன் தக்காளி: கிலோ ரூ.40

உருளைக்கிழங்கு: கிலோ ரூ.15 முதல் ரூ.35

கேரட்: கிலோ ரூ.50 முதல் ரூ.70

பீன்ஸ்: கிலோ ரூ.60 முதல் ரூ.80

பீட்ரூட்: கிலோ ரூ.50 முதல் ரூ.60

முட்டைகோஸ்: கிலோ ரூ.20 முதல் ரூ.25

வெண்டைக்காய்: கிலோ ரூ.25 முதல் ரூ.30

வரி கத்திரிக்காய்: கிலோ ரூ.25 முதல் ரூ.30

நாட்டு கத்திரிக்காய்: கிலோ ரூ.30 முதல் ரூ.40

பாகற்காய்: கிலோ ரூ.40 முதல் ரூ.50

புடலங்காய்: கிலோ ரூ.20 முதல் ரூ.30

சுரைக்காய்: கிலோ ரூ.15 முதல் ரூ.25

முருங்கைக்காய்: கிலோ ரூ.25 முதல் ரூ.30

சேனைக்கிழங்கு: கிலோ ரூ.30 முதல் ரூ.40

பச்சை மிளகாய்: கிலோ ரூ.50 முதல் ரூ.60

இஞ்சி: கிலோ ரூ.90 முதல் ரூ.180

பூண்டு: கிலோ ரூ.130 முதல் ரூ.240

தேங்காய்: ஒன்று ரூ.55 முதல் ரூ.60

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular