நேபாள வெள்ளத்தில் சிக்கிய 37 தமிழர்கள் : தமிழக அரசு வாட்ஸ்அப் உதவி எண் அறிவிப்பு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் ரசுவா மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ரசுவாகடி உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் சிக்கியிருந்த 93 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்களில் சிலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் இருந்ததாக தெரியவந்துள்ளது. இவர்களில் 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 37 தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்த முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை 24 மணி நேர உதவி மையத்தை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ளவர்கள் 1800 309 3793 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

வெளிநாடுகளில் இருப்பவர்கள் +91 80 6900 9900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் மூலம் தொடர்பு கொள்ளலாம். மேலும், +91 80 6900 9901 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பியும் உதவி பெறலாம். தமிழக அரசின் உதவி மையத்தின் வாட்ஸ்அப் எண் 9289516712.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular