வெள்ளத்தில் மிதந்து வந்த வங்கி லாக்கர் : உள்ளே இருந்த பணம் கொள்ளை

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு பல பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளத்தில் இதுவரை 600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் வங்கியின் பணப்பெட்டி ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றங்கரையில் கிடந்த வங்கி பணப்பெட்டியை கண்ட சிலர், அதனை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 29 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நேபாள ரூபாய் 92.68 லட்சம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.57 லட்சம் ஆகும்.

கைது செய்யப்பட்டவர்களின் வயது 19 முதல் 49 வயதுக்குள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் தாடிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்த பணப்பெட்டியும் அதிலிருந்த பணமும் எந்த வங்கியைச் சேர்ந்தவை என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : வெள்ளத்தில் மிதந்த சடலத்தில் இருந்து தங்க நகை திருட்டு; இருவர் கைது

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular