கார் முழுவதும் லிப்ஸ்டிக் முத்தங்கள் கொடுத்த காதலி : காதலனுக்கு அபராதம்..!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இளைஞர் ஒருவரின் காரை அவரது காதலி லிப்ஸ்டிக் முத்தங்களால் அலங்கரித்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குவாலியரைச் சேர்ந்த ஆதித்யா சிகர்வார் என்பவரின் காரில் அவரது காதலி சுமார் 3,400 லிப்ஸ்டிக் முத்தங்களால் அலங்கரித்தார். இதற்காக அவர் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

சாலைகளில், வித்தியாசமான தோற்றத்தில் சென்ற காரை பொதுமக்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதை கவனித்த போலீசார் காரின் விவரங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர்.

கார் வெளிப்புற தோற்றத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றம் மோட்டார் வாகனச் சட்ட விதிகளுக்கு எதிரானது என காரின் உரிமையாளரான ஆதித்யா சிகர்வாருக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், காரில் பதிக்கப்பட்டிருந்த அனைத்து லிப்ஸ்டிக் அடையாளங்களையும் அகற்றி வாகனத்தை சுத்தம் செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular