இன்று ஆகஸ்ட் 25 தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 25 அன்று வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிகவினர் கொண்டாடி வருகின்றனர்
இதனிடையே குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் அன்பு என்பவர் நடத்தி வரும் டீக்கடையில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நாள் முழுவதும் இரண்டு ரூபாய்க்கு டீ விற்பனை செய்யப்படுவதாக அறிவித்து அதன்படி தற்போது வழங்கி வருகிறார் இதில் ஏராளமான பொதுமக்கள் இரண்டு ரூபாய்க்கு டீ வாங்கி மகிழ்ச்சியுடன் சென்றார்
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கும் போது குடியாத்தம் மருமகன் விஜயகாந்த்,, பிரேமலதா இந்த பகுதியை சேர்ந்தவர் தான் மேலும் நான் சென்னையில் பணியாற்ற போது அவரது மண்டபத்தில் பல நாள் சாப்பிட்டு இருக்கிறேன் எனவே விஜயகாந்த்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இன்று நாள் முழுவதும் இரண்டு ரூபாய்க்கு டீ விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
