தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்

செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வது செரிமானம், இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் வழங்குகிறது.

செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. ஒரு செவ்வாழைப்பழத்தில் சுமார் 90 கலோரிகள், 21 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்ச்சத்து, 358 மி.கி. பொட்டாசியம் மற்றும் 8.7 மி.கி. வைட்டமின் சி உள்ளது.

இதையும் படிங்க : தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

செவ்வாழையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதில் காணப்படும் சில ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கள் குடலுக்கு நன்மை செய்கிறது. இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.

செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கக்கூடும். இதனால் அடிக்கடி உணவு அல்லது அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வதை குறைக்க உதவலாம்.

வாழைப்பழத்தில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவுகின்றன. செவ்வாழையிலும் இயற்கை சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், அன்றாட உணவில் ஆற்றல் தரும்.

இதையும் படிங்க : தினமும் ஒரு வாழைப்பழத்தை இந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular