‘காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் த.வெ.க ஆட்சி..’ மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி

தமிழக வெற்றிக் கழகம் தற்போது இந்தியா கூட்டணியில் இடம்பெறவில்லை என்றும், எதிர்காலத்தில் எம்.பி.க்கள் கிடைத்தால் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், தமிழக வெற்றிக் கழகம் இந்தியா கூட்டணியில் இடம்பெறுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், தவெகவுக்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என்பதால், அந்தக் கட்சியை இந்தியா கூட்டணியில் இணையுமாறு அழைக்க முடியாது என்றார். எதிர்காலத்தில் தவெக எம்.பி.க்களைப் பெற்றால், அப்போது இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தவெக 106 இடங்களில் வெற்றி பெற்ற பின்னர் விஜய் முதலில் ராகுல் காந்தியைத்தான் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும் கூறினார். விஜய் முதலமைச்சராக பதவியேற்க ராகுல் காந்தியிடம் ஆதரவு கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.

தவெக ஆட்சி அமைப்பதற்கான முதல் ஆதரவு கடிதத்தை காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் தவெகவின் அரசியல் நிலைமை வேறுவிதமாக மாறியிருக்கும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆதரவு இல்லாத சூழலில் மத்திய அமைச்சர் அமித் ஷா தவெகவை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியிருப்பார் என்று அவர் கூறினார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular